ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கிங் ஆப் கோதா'. இதில் ஜஸ்வர்யா லக்ஷ்மி, பிரசன்னா, ரித்திகா சிங், சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். தற்போது இந்த படம் ரிலீஸ் தேதியை நெருங்கியுள்ளதால் புரமேஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற ஓனம் பண்டிகைக்கு ஆகஸ்ட் 25ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சாரில் நிறைய ஆக்ரோஷமான காட்சிகள் உள்ளதால் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும், இப்படம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் நீளம் உள்ளதாக கூறப்படுகிறது.