ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கு நடிகரான சுனில், காமெடி, ஹீரோ, குணச்சித்திர உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக தமிழில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். ‛‛மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி, ஜப்பான்'' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் ‛மாவீரன், ஜெயிலர்' படங்கள் திரைக்கு வந்துவிட்டன. மற்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. தற்போது மற்றுமொரு புதிய தமிழ் படத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் முதல் முறையாக ராகவா லாரன்ஸ்-ன் தம்பி எல்வின் லாரன்ஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ‛புல்லட்' என பெயரிட்டுள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இந்த நிலையில் நடிகர் சுனில் இப்படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கதாநாயகியாக வைஷாலி ராஜ் நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.