ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் மதன் 'அருவி' படத்தின் மூலம் பிரபலமானதால் 'அருவி' மதன் என்று அழைக்கப்பட்டு, இப்போது அந்த பெயருடன் வலம் வருகிறார். தொடர்ந்து கர்ணன், அயலி, துணிவு, மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 'நூடுல்ஸ்' என்ற படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி உள்ளார் . இதில் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை வெளியிடுகிறார். 2 நிமிடத்தில் எடுக்கும் முடிவினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இப்படம் பேசுகிறது. வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்கிறார்கள்.