ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தமிழ் படங்களின் மீது தனிப் பிரியம் கொண்டவர். தமிழில் நல்ல படங்கள் வரும்போது தனது பாராட்டுகளை தவறாமல் தெரிவித்து வருபவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானார்.
இந்த நிலையில் தற்போது அவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ. இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்த விதம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார் அனுராக் காஷ்யப்.
“இதற்கு முன்னதாக விக்ரம் படத்தை பார்த்துவிட்டு மீடியாக்களில் ஒரு முறை பேசும்போது லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் நானும் இணைந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருந்தேன். ஒருநாள் லோகேஷ் கனகராஜ் என்னை அழைத்து வாங்க சார்.. உங்களுக்காக இதில் ஸ்பெசலாக ஒன்றை எழுதியுள்ளேன் என லியோ படத்தில் என்னை இணைத்துக் கொண்டார்” என்று கூறியுள்ளார்.