ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

நடிகர் சூர்யாவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு பெயரை பெற்று தந்தன. அதுவும் ஓடிடியில் தான் வெளியானது. மற்ற படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது சிவா இயக்கத்தில் ' கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு விழாவில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, ‛‛ரசிகர்களிடம் தனது அடுத்த அடுத்த படங்களின் அப்டேட் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, கங்குவா படம் நாம் நினைத்தது விட 100 மடங்கு நன்றாக வந்துள்ளது. சூர்யா 43வது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. மேலும், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விடுதலை இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்கு பிறகு துவங்கும் . இது அல்லாமல் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக உருவாக்க லோகேஷ் கதை ஒன்றை கூறியுள்ளார். விரைவில் அது படமாகும். இதற்கு பிறகுதான் இரும்பு கை மாயாவி லோகேஷ் இயக்கத்தில் உருவாகும்" என தனது அடுத்த பட அப்டேட்களை கூறி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் சூர்யா .




