'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
கடந்த 2007ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'சிவாஜி தி பாஸ்'. ஸ்ரேயா, ரகுவரன், விவேக், சுமன், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர் மற்றும் நயன்தாரா சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஏ.வி.எம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ரூ.100 கோடி உலகளவில் வசூலித்த முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சிவாஜி தி பாஸ் படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு பதிப்பில் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.