டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இயக்குனர் கே.பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛3.6.9'. இந்த படத்தை 81 நிமிடங்களில் 24 கேமராக்களைக் கொண்டு படமாக்கி சாதனை செய்துள்ளார்கள். அவருடன் பிளாக் பாண்டி, அங்கையர் கண்ணன், பிரபு, கார்த்திக், நிகிதா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் வெளிநாட்டை சேர்ந்த நடிகர்களும் நடித்துள்ளார்கள். சுமார் 600 தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் என்ற அமைப்பு இந்த படத்திற்கு உலக சாதனை விருதை வழங்கி உள்ளது.
விஞ்ஞானம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்து கே.பாக்யராஜ் கூறுகையில், 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை செய்த இந்த 3.6.9 படத்தில் நானும் பங்கேற்றது சந்தோஷமாக உள்ளது. இதற்கு முயற்சி எடுத்த இயக்குனர் சிவ மாதவ் மற்றும் தயாரிப்பாளர் பி ஜி எஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது என்று தெரிவித்துள்ளார்.




