தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன். ‛‛தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில்'' என கவனிக்கத்தக்க படங்களில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளான, நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் சொல்லியதை அடுத்து வரும் செப்., 13ல் திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன், அதன்பின் அன்பிற்கினியாள் படத்தில் நாயகியாக நடித்தார். தற்போது கொஞ்சம் பேசினால் என்ன என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.