மலேசியாவில் குட்டி கதை சொல்வாரா விஜய் | மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம் | ரஜினியின் மூன்று முகம் ரீ ரிலீஸ் ஆகுது : ஆர்.எம்.வீரப்பன் மகன் தகவல் | ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது |

தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டினும் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார். அப்பா - மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு புதிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கண்ணகி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கீர்த்தி பாண்டியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், தொடர்ந்து தனது சினிமா குறித்த செயல்பாடுகளை தெரிவித்து வரும் கீர்த்தி பாண்டியன், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடற்கரை ஒன்றில் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி பாண்டியன் ஹிந்தி நடிகைகளுக்கு கடும் போட்டி தரும் வகையில் இருப்பதாக கமெண்டில் கூறி வருகின்றனர்.