அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் உலகம் முழுக்க இன்று(ஆக., 10) வெளியாகி உள்ளது. ரஜினிக்கு மீண்டும் ஒரு கம்பேக் படமாக இது அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ரஜினியின் ரசிகர்களாக இருந்து இப்போது சினிமாவில் பிரபலங்களாக இருக்கும் பல திரைப்பிரபலங்களும் ஜெயிலர் படத்தின் முதல்காட்சியை கண்டுகளித்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டர் ஒன்றில் ரஜினியின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, பேரன்கள் உள்ளிட்ட குடும்ப சகிதமாக இந்த படத்தை கண்டுகளித்தனர். மேலும் படத்தின் இடைவெளியின் போது தியேட்டரில் பிரத்யேகமாக ஜெயிலர் கேக்கை வெட்டி கொண்டாடினர்.
அதேப்போல் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். அதோடு ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் பட பாட்டு பாடியும், ரசிகர்களை பாட வைத்தும் அசத்தினார்.
ரஜினியின் முன்னாள் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்தபோதிலும் ரஜினி ரசிகராக இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார். சில தினங்களுக்கு முன் ஜெயிலர் வாரம் என குறிப்பிட்டு இருந்தார். அதோடு சென்னை ரோகிணி தியேட்டரில் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார்.
இவர்களைபோன்று ராகவா லாரன்ஸ், வசந்த் ரவி, மிர்ணா, கார்த்திக் சுப்பராஜ், காளிதாஸ் ஜெயராம், ஜாபர் உள்ளிட்ட பல பிரபலங்களும் ஜெயிலர் படத்தின் முதல்காட்சியை கண்டு ரசித்தனர்.
சென்னை வந்த ஜப்பான் ரசிகர்
முத்து படம் வெளியான பிறகு ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர் வட்டம் உருவானது. ஜப்பானின் ஒஸாகாவை சேர்ந்த ரஜினி ரசிகர் யசுதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை வந்து ரஜினியின் படத்தை பார்த்து ரசித்து வருகிறார். தற்போது ஜெயிலர் படம் வெளியாகி உள்ள நிலையில் ஜப்பானில் இருந்து தனது மனைவி உடன் சென்னை வந்த யசுதா, இங்குள்ள தியேட்டர் ஒன்றில் ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தார். முன்னதாக ரஜினி இமயமலை கிளம்பும் முன் அவரை சந்தித்து பேசினார் யசுதா.