தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கந்தா'. இந்த படத்திற்கு போயபட்டி ரெப்போ என்ற தற்காலிக தலைப்பு வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இதில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர், க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை சரியான ஆக்ஷன் விருந்துக்கு தயார் செய்து வைத்துள்ளனர். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் இருந்து முதல் பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலை தமிழில் ( உன்ன சுத்தி சுத்தி) தெலுங்கில் ( நீ சுட்டு சுட்டு) இது அல்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9.36 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.