டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

எலி பட இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஸ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஜயப்பன், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் 'இறுகப்பற்று'. பொட்டேன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் முதல் பார்வையை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மூன்று ஜோடிகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக முதல் பார்வை போஸ்டரிலும் மூன்று ஜோடிகளின் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர். காதல் மற்றும் வாழ்க்கையின் அழுத்தமான பயணத்தில் இந்த கதை மூன்று ஜோடிகளைப் பற்றி விவரிக்க உள்ளது. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் உறவுகளை பற்றி பேச உள்ளது. படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. விரைவில் படத்தின் வெளியீடு உள்ளிட்ட மற்ற அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வர உள்ளது.




