பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தியிலும் வெளியாக இருக்கிறது. அதற்கேற்றபடி ஒவ்வொரு மொழியிலிருந்தும் முக்கியமான நடிகர்களும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். படத்தின் தயாரிப்பு நிறுவனமே இந்த படம் பான் இந்தியா ரிலீஸ் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை தமன்னா ஒரு பேட்டியின் போது ஜெயிலர் பான் இந்திய படம் அல்ல என்றும், குறிப்பிடத்தக்க ஒரு பிராந்திய மொழி படம் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, "ரஜினிகாந்தை ஆராதிக்கும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக இருக்கும். தமிழ் மட்டுமல்லாது இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியிலும் உருவாகியுள்ளது. இதன் மூலம் அதிக அளவில் ரீச் கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். ஜெயிலர் பான் இந்திய படம் அல்ல. மற்ற பிராந்திய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிடுகின்றனர்" என்றும் கூறியுள்ளார்.




