பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் தொடங்கி, சென்னை, ஐதராபாத் போன்ற லொகேஷன்களில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக அறிவித்தார் லோகேஷ். இந்நிலையில், தனக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்ட விஜய், நேற்று ஓய்விற்காக வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டு சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில வாரங்கள் வெளிநாட்டில் ஓய்வெடுத்து விட்டு சென்னை திரும்புகிறார் விஜய். அதன்பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.