பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
முத்தையா இயக்கிய விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி. முதல் படமே வெற்றி பெற்ற நிலையில், அதையடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த மாவீரன் படமும் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் அதிதி. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்ற நகரில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று அப்படக்குழுவினருடன் அதிதி ஷங்கரும் போர்ச்சுக்கல்லுக்கு பறந்துள்ளார். அங்கு இப்படத்தின் படப்பிடிப்பை ஒரு மாதம் முகாமிட்டு நடத்திவிட்டு அதன் பிறகு சென்னை திரும்ப உள்ளார்கள்.