'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன். இவர் தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், அதில் விட்டதை இந்த ஜெயிலரில் பிடித்து விட வேண்டும் என்று ஒரு அதிரடியான கதையுடன் களம் இறங்கி இருக்கிறார் நெல்சன். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் சிலை கடத்தலை மையமாக கொண்ட கதையை திரைக்கதை அமைத்திருக்கிறார் நெல்சன். சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய புள்ளி ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார். அதையடுத்து அவனை மீட்பதற்காக ஒரு கும்பல் களமிறங்குகிறது. அப்போது ரஜினிக்கும், அவர்களுக்கும் இடையே நடப்பது தான் இந்த ஜெயிலர் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது.