பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதன் பிறகு அரசியலில் இறங்கி விட்டால் படங்களில் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் நேற்று நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கம் சந்திப்பில் பேசப்பட்டதாக கூறினார்கள்.
இந்த நிலையில் விஜய் மற்றொரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது . சமீபத்தில் விஜய்யை சந்தித்து முதல்வன் பாணியில் இயக்குனர் ஷங்கர் ஒரு கதையை கூறி அது விஜய்க்கு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது . ஷங்கர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி முடித்தவுடன் விஜய் படம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது விஜய்யின் 70வது படமாக உருவாகும் என்கிறார்கள். அதற்கு முன் விஜய்யின் 69வது படத்தை அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய்யும், ஷங்கரும் ஹிந்தியின் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கான நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.