லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். அவருடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். வருகிற ஜூலை 14ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை மட்டுமின்றி ஹைதராபாத், பெங்களூரு, கேரளா போன்ற முக்கிய இடங்களிலும் இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இப்படம் ரிலீசுக்கு முன்பே 80 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இதற்கு முன்பு தான் நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்து விட்டதால் அந்த படத்தில் நடிப்பதற்கு 30 கோடி சம்பளம் வாங்கியிருந்த சிவகார்த்திகேயன், இந்த மாவீரன் படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் குறைத்து 25 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.