ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. ராணுவ பின்னணியில் கதைக்களம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தீப் கிஷன் சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததாக அருண் மாதேஸ்வரன் போட்டோ உடன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு பின் தனுஷின் 50வது படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார் சந்தீப் கிஷன்.