இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பி.வாசு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் வைத்து உருவாக்கி வருகிறார். இதில் வடிவேலு, கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர், மும்பை போன்ற இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த நிலையில் டப்பிங் பணிகளை லாரன்ஸ் துவங்கியுள்ளார் என்று அவர் டப்பிங் பேசும் போட்டோ உடன் பகிர்ந்துள்ளனர். இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 15ம் தேதி அன்று தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.