Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' ஆகஸ்ட் 4ல் ரிலீஸ்!

03 ஜூலை, 2023 - 03:15 IST
எழுத்தின் அளவு:
Anushka's-Miss-Shetty-Mr-Polishetty-releases-on-August-4!

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நாயகியாக நடித்திருந்த அனுஷ்கா, அதன்பிறகு 2020ம் ஆண்டில் சைலன்ஸ் என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமையல் கலை வல்லுனராக அனுஷ்கா நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அதோடு தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்தை கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிப்பிற்கு இடைவெளி விடுகிறாரா விஜய்?நடிப்பிற்கு இடைவெளி விடுகிறாரா ... ரஜினியை அடுத்தடுத்து சந்தித்த அரசியல் புள்ளிகள்! ரஜினியை அடுத்தடுத்து சந்தித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)