டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், அடுத்து கமல் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. தற்போது அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஆனால் இந்த படம் குறித்த அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கமல் - எச்.வினோத் இணையும் அப்படத்தின் டிஜிட்டல் உரிமையை 125 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையையும் இதே நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 125 கோடிக்கு தான் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படம் கமலுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்த நிலையில், தற்போது வியாபாரத்தில் விஜய் படத்துடன் போட்டி போடும் அளவுக்கு கமலின் மார்க்கெட் எகிறி விட்டதையே இது வெளிப்படுத்துகிறது.




