Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வேட்டையாடு விளையாடு' படத்திற்கு காலை 8 மணி காட்சி

17 ஜூன், 2023 - 06:28 IST
எழுத்தின் அளவு:
Morning-8-AM-show-for-Vettaiyaadu-Vilaiyaadu

கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து 2006ம் ஆண்டு வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'. பரபரப்பான க்ரைம் திரில்லராக வெளியான இந்தப் படம் தற்போது 'ரீமாஸ்டர்ட்' செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் அடுத்த வாரம் ஜுன் 23ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்காக காலை 8 மணிக்கு சில சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளது. பொதுவாக புதிய படங்கள் வெளியாகும் போதுதான் இப்படி காலை 8 மணி காட்சிகள் நடைபெறும். ஆனால், 17 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம் மீண்டும் வெளியாகும் போது இப்படி சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது அதிசயம் தான்.

ரி--ரிலீஸ் என அழைக்கப்படும் பழைய படங்களின் மறு வெளியீடுகள் கடந்த பல வருடங்களாகவே நின்று போய்விட்டது. இருந்தாலும் சில பழைய படங்களை ஒளி, ஒலியில் இந்தக் காலத் தொழில்நுட்பங்களுடன் சேர்த்து மீண்டும் வெளியிடுவதற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போலோ சங்கர் படத்தின் டப்பிங் துவங்கிய கீர்த்தி சுரேஷ்போலோ சங்கர் படத்தின் டப்பிங் ... தமன்னாவின் 'தாராள' நடிப்பு : ரஜினிகாந்த், சிரஞ்சீவி ரசிகர்கள் அதிர்ச்சி தமன்னாவின் 'தாராள' நடிப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in