தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே நடிகை தமன்னா பற்றிய பேச்சுக்கள்தான் அதிகமாக உள்ளது. 'ஜீ கர்தா' என்ற வெப் தொடரில் தமன்னா மிகவும் தாராளமாக நடித்திருக்கிறார். படுக்கையறை காட்சி, மிக மிக நெருக்கமான காட்சி, உடல் அசைவுகள் என அவர் நடித்துள்ள காட்சிகளின் வீடியோக்கள், ஸ்க்ரீன்ஷாட்டுகள் ஆகியவை சமூக வலைத்தளங்களிலும், வாட்சப்களிலும் பரவி வருகின்றன. அவற்றைப் பார்த்த பல ரசிகர்கள் தமன்னாவின் தாராள நடிப்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.
குறிப்பாக, ரஜினி ரசிகர்களுக்கும், சிரஞ்சீவி ரசிகர்களுக்கும் அது அதிக அதிர்ச்சியைத் தந்துள்ளது. தமன்னா தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'போலா சங்கர்' படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்தும், தெலுங்கில் சிரஞ்சீவியும் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள். அவர்களது படங்களை குடும்பத்துடன் வந்து பார்ப்பவர்கள் அதிகம். அந்தப் படங்களில் தமன்னா தான் கதாநாயகி.
ஆபாசமான விதத்தில் வெப் தொடரில் நடித்துள்ளதால் தமன்னாவின் இமேஜ் தற்போது தள்ளாடி வருகிறது. அது 'ஜெயிலர்' படத்திற்கும் 'போலா சங்கர்' படத்திற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்த வாரம் தமன்னா நடித்துள்ள மற்றொரு தொடரான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வேறு வர உள்ளது. அதிலும், ஆபாசமாகத்தான் நடித்துள்ளார் என்று தகவல். முத்தக் காட்சிகளுக்குக் கூட இத்தனை வருடங்களாகத் தடை சொன்ன தமன்னா திடீரென இப்படி மாறி நடிப்பதன் காரணம் பலருக்கும் புரியவில்லை.