சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் |
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், 'புஷ்பா' சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து நடிக்கின்றனர். சுசீந்திரன் இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார், வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இதில் விசாரணை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். நாடக குழு தலைவராக பாரதிராஜா நடிக்கிறார். 1980 கால கட்ட கதை என்பதால் திண்டுக்கல் நகரில் அந்த காலகட்ட பின்னணியைக் கொண்டு வரும் வகையில், பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, கொடைக்கானல், சிறுமலை, பழநி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நடந்தது.
தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் நடந்து வருகிறது. இங்கு தொடர்ந்து 24 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாதத்துடன் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டிற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.