லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல ஹாலிவுட் நடிகர் டிரீட் வில்லியம்ஸ். 1979-ல் வெளியான 'ஹேர்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதே ஆண்டில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான '1941' என்ற படத்தில் நடித்தும் புகழ்பெற்றார். இதுதவிர 'தி ஈகிள் ஹாஸ் லேண்டட்' 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா', 'தி லேட் ஷிப்ட்', '127 ஹவர்ஸ்' உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 'கேப்படஸ் வுமன்' என்ற தொடரில் நடித்து வந்தார்.
71 வயதான டிரீட் வில்லியம்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்ட் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிரீட் வில்லியம்ஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். டிரீட் வில்லியம்ஸ் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.