லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல திரைப்பட நடிகையான வினோதினி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக அரசியல் சார்ந்த கருத்துகளை பேசி வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். இணைந்த பின் அவர் வெளியிட்ட முதல் பதிவிலேயே சில அரசியல் கட்சிகளை நாசூக்காக கலாய்த்துள்ளார்.
கடவுளுக்கும் அஞ்ஞானவதிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அந்த பதிவை வெளியிட்டுள்ள வினோதினி, மதத்தின் அடிப்படையில் ஏன் கட்சியில் சேரவில்லை என்று கடவுள் கேட்க, அதற்கு வாரம் ஒருமுறை கள்ள ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செய்யும் கருவிகள் இருப்பதை கண்டுபிடிக்க காசு இல்லை என்று பதில் கூறியுள்ளார். அதேபோல் பகுத்தறிவு பேசுற கட்சியில் சேரலையா? என்று கடவுள் கேட்க. 'பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேட்குறாங்க' என்று அந்த கட்சிக்காரர்களுக்கே பகுத்தறிவு இல்லை என கிண்டலடித்துள்ளார். இப்படியாக நீண்டுகொண்டே செல்லும் அந்த உரையாடலில் கடைசியில் மைய அரசியல் என்று குறிப்பிட்டு தான் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்திருப்பதை தெரிவித்துள்ளார். வினோதினியின் இந்த நக்கலான பதிவை படிக்கும் பலரும் ஆரம்பமே அமர்க்களமா? என ஜாலியாக கேட்டு வருகின்றனர்.