சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர், நடிகர் அர்னவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில நாட்களிலேயே அர்னவ் புதிதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக திவ்யா ஸ்ரீதர் போலீசில் புகாராளித்தார். தற்போது இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் கர்ப்பமாக இருந்த திவ்யா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் அர்னவ் தன்னை போலவே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும், தவிர ஒரு ஆணை காதலிப்பதாக ஏமாற்றி அவரது தற்கொலைக்கும் காரணமாக இருந்ததாகவும் அண்மையில் பேட்டியில் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் திவ்யா வெளியிட்டுள்ளார். திவ்யாவின் இந்த குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ள அர்னவ், 'முதல் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே திவ்யா என்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்து என்னை ஏமாற்றினார். மேலும், என்னுடைய கேரியரை காலி செய்வதற்காக சீரியல் நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவருடனும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன்' என்று பேட்டியளித்துள்ளார். மேலும், திவ்யா, அர்னவின் கேரியரை காலி செய்ய ஈஸ்வருடன் சேர்ந்து திட்டம் தீட்டுவது போல் வாட்ஸப் ஸ்கீரின்ஷாட்டையும் வெளியிட்டிருக்கிறார்.