லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை நடிகை அனிஷா ஷெட்டி 'பாண்டவர் இல்லம்' தொடரில் தேன்மொழி என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சண்டைக்கோழி' தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் அசோசியட் இயக்குநராக பணிபுரிந்து வரும் ஜான் பால் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி ஜோடியாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் அனிஷாவின் பிறந்தநாளையொட்டி ஜான் பால் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் வாழும் இந்த வாழ்விற்கு நீ அர்த்தம் கொடுத்தாய். என் முகத்தில் சிரிப்பை வரவழைக்கிறாய், உனது தொடுதல் நீ என்னை எந்த அளவிற்கு நேசிக்கிறாய் காதலிக்கிறாய் என்பதை காட்டுகிறது. நீயே என் தோழி, நீயே என் காதலி. ஹாப்பி பர்த் டே மை லவ்' என்று பதிவிட்டு தனது காதலி அனிஷாவுக்கு உருக்கமாக வாழ்த்துகள் கூறியுள்ளார்.