100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! |
தமிழ் சினிமாவின் சாதனையாளர் என்று மற்ற திரையுலகக் கலைஞர்களாலும் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். அவர் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் 'சலார்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அவருக்கு அதற்காக கதாநாயகனாக நடிக்க வாங்கும் சம்பளத்தை வழங்கத் தயாராக உள்ளார்கள் என்றும் செய்தியைப் பரப்பி வருகிறார்கள். ஒரு நடிகர் என்ன சம்பளம் வாங்குகிறார் என்று அவருக்கும் அவருக்கு அந்த சம்பளத்தைக் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மட்டுமே தெரியும். இல்லையென்றால் அவர்களின் ஆடிட்டர்களுக்குத் தெரியும்.
அதிக சம்பளத்திற்காக வில்லனாகவும் நடிக்க கமல்ஹாசன் சம்மதிக்க மாட்டார் என அவரது தீவிர ரசிகர்கள் நம்புகிறார்கள். கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படத்தின் மூலம் அதிக வசூல் சாதனையைப் பெற்று அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள், பிரம்மாண்டப் படங்கள் என தனது திட்டமிடலை வைத்திருக்கும் கமல்ஹாசன் தனது இமேஜை மாற்றி வில்லனாக நடிக்க வாய்ப்பில்லை என்பதுதான் அவர்களது ரசிகர்களின் கருத்து.
கமல்ஹாசன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் சில ரஜினி ரசிகர்கள் வேண்டுமென்றே இப்படி ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள் என்றும் அவர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். அதிக சம்பளம் கொடுத்தால் ரஜினிகாந்தும் வில்லனாக நடிப்பாரா என்றும் அவர்கள் எதிர் கேள்வி கேட்கிறார்கள்.