'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' |
சரத்குமார், அசோக் செல்வன் நிகிலா விமல் நடித்துள்ள படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை, இ4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளன.
படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் சரத்குமார் கூறியதாவது: இந்த படத்தில் மூத்த போலீஸ் அதிகாரியாக நானும், புதிதாக வேலைக்குச் சேர்ந்த அதிகாரியாக அசோக் செல்வனும் நடித்திருக்கிறோம். இருவரும் தொடர் கொலைகளைச் செய்யும் குற்றவாளியைப் பிடிப்பதுதான் கதை. கொலையைக் கண்டுபிடிக்கும் விதம் வித்தியாசமானதாக இருக்கும். எப்படி புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் கேரக்டர் எனக்கு.
நான் போலீஸ் அதிகாரியாக சில படங்களில் நடித்திருந்தாலும் இதன் திரைக்கதை அதிலிருந்து மாறுபட்டு இருக்கும். 14 நாட்களில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்பட்டன. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இது ஒரு 'கிரைம் த்ரில்லர் படம். தற்போது இளம் நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்து வருகிறேன். அப்படியென்றால் நான் இளம் நடிகர் இல்லையா என்று கேட்காதீர்கள், நானும் இளைஞன்தான். என்றார்.