ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் |
ஆதி நடித்த மரகத நாணயம் என்ற படத்தை இயக்கியவர் ஏஆர்கே சரவணன். இவர் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வீரன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவருடன் வினய் ராய், ஆதிரா ராஜ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியானது. வருகிற ஜூன் இரண்டாம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஏஆர்கே சரவணன். அது குறித்து அவர் கூறுகையில், நான் இயக்கிய மரகத நாணயம் படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டிய தனுஷ் தனக்கும் ஒரு கதை தயார் பண்ணுமாறு அப்போதே கூறியிருந்தார். வீரன் படம் திரைக்கு வந்ததும் தனுஷை சந்தித்து சில கதைகளை அவரிடத்தில் சொல்லி அதில் அவருக்கு பிடித்தமான கதையை தேர்வு செய்து அந்த படத்தை இயக்குவேன் என்கிறார்.