த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படம் 'டெடி'. குழந்தைகளையும் குடும்பத்தினரையும் கவர்ந்த ஒரு படமாக அமைந்தது. அப்படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெலுங்கிலும் அப்படத்தை ரீமேக் செய்துள்ளது. அல்லு அர்ஜுன் தம்பியான அல்லு சிரிஷ் நாயகனாக நடித்துள்ளார். அஜ்மல், பிரிஷா சிங், ஆலி, முகேஷ் ரிஷி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
தமிழில் 'டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கூர்க்கா, ட்ரிகர்' படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தெலுங்கில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பார்வை மற்றும் முன்னோட்ட வீடியோ இன்று மாலை வெளியானது.
தமிழில் ஆர்யா நடித்து வெளியான 'டெடி' படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தார்கள். இப்போது அல்லு சிரிஷ் நடிக்க ரீமேக் செய்துள்ளார்கள். தெலுங்கில் 'பட்டி'(BUDDY) என பெயர் வைத்துள்ளனர். இதற்கு முன்பு இந்த படத்தில் சந்தீப் கிஷான் நடிப்பதாக அறிவித்தனர். ஆனால், ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தை விட்டு விலகிய நிலையில் இப்போது அல்லு சிரிஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.