ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் |
நடிகர் அல்லு சிரீஷ் ஒரு டிரெண்ட் செட்டர் என்பதில் சந்தேகமில்லை. நடிகரும் பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புதுபுது படைப்புகளை இயக்க தயங்கியதில்லை. அல்லு சிரீஷ் தென்னிந்திய விருது விழாக்களான ஐபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார், இவரின் நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார்.
டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகர் இவர், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார். ஹிந்தி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய ஹிந்தி - விலாயதி ஷரப் என்ற மியூசிக் வீடியோவில் நடித்து, ஹிந்தி சிங்கிளில் நடித்த முதல் இளம் தென்னிந்திய நடிகர் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளார்.