வாடிவாசல் : வெற்றிமாறன் பேச்சிலும் குழப்பம் | சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல் | கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த நிமிஷா | நடிச்சா ஹீரோ தான்... 3 படங்கள் ஹிட் : பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி | ‛வட சென்னை 2'... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல்' டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம் | 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக வதந்திகளை மறுத்த தயாரிப்பாளர் | ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது |
பல தனியார் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் வி.ஜே.கதிரவன். இவர் கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். தற்போது இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்று(மே 29) இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்கை மூண் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் கதிரவன். இந்த படத்திற்கு கூடு என்று தலைப்பு வைத்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்குகின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக்கில் கையில் பறவைகளின் கூண்டு மற்றும் அதில் உள்ள முட்டையை ஏந்தியபடி போஸ் தந்துள்ளார் கதிரவன்.