இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா, சிவாவிற்கு முன்பே திரையுலகில் நடிகராக அடி எடுத்து வைத்தவர். அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர். பின்னர் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதே சமயம் மலையாள திரை உலகில் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பிரச்னை தொடர்பாக மிகவும் சிக்கலான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் ஒரு வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி, தற்போது முன்பு போல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றபோது நடந்த ஒரு நிகழ்வு பற்றி பாலா கூறியுள்ளார்.
அதில், “டாக்டர்கள் நான் பிழைப்பதற்கு வாய்ப்புகள் ரொம்பவே குறைவு என்றும் அறுவை சிகிச்சை செய்தாலும் அது எந்த அளவுக்கு வெற்றி தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் என்னை பார்க்க வந்த என்னுடைய சகோதரர் சிவா மற்றும் என்னுடைய சகோதரி இருவரிடமும் கூறினார். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர். அந்த சமயத்தில் என்னுடைய சகோதரி, என்னுடைய டாக்டரிடம் இதுவே உங்களது சகோதரராக இருந்தால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அந்த டாக்டர் அவரை நிம்மதியாக சாக விடுவேன் என்று இன்னொரு அதிர்ச்சிகரமான பதிலை கூறினார். இதை தொடர்ந்து இது பற்றி மீடியாவுக்கு கூட அவர்கள் அறிக்கை கொடுப்பதற்கு தயாராகினர்.
ஆனால் அடுத்து வந்த சில மணி நேரங்களில் என்னுடைய உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு அதன்பிறகு இதோ முன்புபோல் தேறி இப்போது உங்கள் முன்னால் பழைய பாலாவாக திரும்பி வந்துள்ளேன். இந்த சமயத்தில் என் நண்பர்களையும் தாண்டி நான் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சிலர் அதையெல்லாம் மறந்துவிட்டு என்னை பார்ப்பதற்காகவே மருத்துவமனைக்கு வந்து சென்ற நிகழ்வு என்னை நெகிழ வைத்தது.
எனக்கும் நடிகர் உன்னி முகுந்தனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரை நான் ஒரு சகோதரராகத்தான் கருதுகிறேன். ஆனால் முதல் ஆளாக அவர்தான் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து சென்றார். அவருக்கு என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார் பாலா.