50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் |

கடந்த வெள்ளியன்று 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் வெளியான பார்க்கிங் படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த குணச்சித்ர நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய 3 விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் பார்க்கிங் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிக்கின்றன.
இந்நிலையில் பார்க்கிங் படக்குழுவினரை அழைத்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த போட்டோக்களை பகிர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட பதிவில், ‛‛விருதே வாழ்த்திய தருணம். ஒரு நண்பன் போல பேசினீர்கள். அவருடனான(எம்எஸ் பாஸ்கர்) உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்க வேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது. எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி கமல் சார், லவ் யூ சார்'' என குறிப்பிட்டுள்ளார்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர்.