சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

கே.பாலச்சந்தரிடம் அவர் இயக்கிய படங்களில் டாப் 10 படங்களை பட்டியலிடச் சொல்லி கேட்டபோது அந்த 10 படங்களில் ஒன்றாக இருந்தது 'கல்யாண அகதிகள்'. அவர் மிகவும் விரும்பி, நேசித்து இயக்கிய படம் இது.
இந்தப் படத்தில்தான் நாசர் அறிமுகமானார். சரிதா, ஒய்.விஜயா, வனிதா, குயிலி, நிஷா நூர், சீமா என ஹீரோயின்கள் நடித்தார்கள். இதில் நிஷா நூர் தவிர மற்றவர்கள் பின்னாளில் சினிமாவில் உயரங்களை தொட்டார்கள்.
சந்தோஷமாக திருமண வாழ்க்கைக்குள் சென்ற பெண்கள், குடிகார கணவன், வரதட்சனை, சந்தேக பேர்வழி, உழைக்காத சோம்பேரி, காம வெறி பிடித்த மாமன்கள் என பல சோதனைகளை சந்தித்து திருமண பந்தத்தில் இருந்து வெளியேறி ஒன்றாக ஒரே இடத்தில் வாழ்கிறார்கள்.
தனித்தனி வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். பொதுவான நேரங்களில் 'கல்யாண அகதிகள்' என்ற இசை குழுவை தொடங்கி அதன் மூலம் பணம் வசூல் செய்து மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது மாதிரியான கதை.
குறிப்பாக இந்த படத்தில் சரிதாவின் காதல் கணவர் திருமணத்திற்கு பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொல்லி வற்புறுத்துவார். 'உனக்கு கணவன் வேண்டுமா? முருகன் வேண்டுமா' என்பார். சரிதா முருகன்தான் வேண்டும். பிடித்த மதத்தை விட்டுவிட்டு இன்னொரு மதத்தில் வலுக்கட்டாயமாக வாழ முடியாது என்று கூறிவிடுவார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் படம் ஏனோ எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படம் பெரிதும் பேசப்படும், விவாதிக்கப்படும், வரவேற்கப்படும் என்று பாலச்சந்தர் நம்பினார். ஆனால் அவை எதுவும் பெரிதாக நடக்கவில்லை. இது தனக்கு வருத்தமாக இருந்தாக பின்னாளில் பாலச்சந்தர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திரைப்படம் பயிலும் மாணவர்களுக்கு இன்னும் இந்த படம் ஒரு பாடமாக கற்றுத் தரப்படுகிறது.