ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தமிழ் இசை அமைப்பாளர்கள் தனித்தனியாக பொது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேரடி இசை நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இசை அமைப்பாளர்கள் வித்யாசாகரும், விஜய் ஆண்டனியும் அடுத்தடுத்த நாட்களில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 20ம் தேதி வித்யாசாகரும், 21ம் தேதி விஜய் ஆண்டனியும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். தனித்தனி இசை நிகழ்ச்சி என்றாலும் நடத்தப்படும் இடம், நடத்தும் அமைப்பு ஒன்றுதான். இரு நிகழ்ச்சிகளிலும் முன்னணி பாடகர்கள், பாடகிகள் பாடுகிறார்கள், முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.




