படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகைகள் அறிமுகமாவது புதிதில்லை. எமி ஜாக்சன், சன்னி லியோன் உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் மதுரா. விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் லண்டனில் இருந்து வரும் இசை குழுவின் தலைவி ஜெசி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
தனது சினிமா அறிமுகம் குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை ஜெர்மானியர், எனது தாய் இலங்கை தமிழ் பெண். இருவரும் காதலித்து திருமணம் செய்து என்னை பெற்றெடுத்தார்கள். ஜெர்மனியில் சட்டம் படித்திருக்கிறேன். விருப்ப மொழியாக தமிழ் படித்து பிராங்பர்ட் தமிழ் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். நாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் கற்றுள்ளேன். சுவிட்சர்லாந்து, லண்டன் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன். பல இசை வீடியோக்களில் நடித்திருக்கிறேன். இந்த வீடியோக்கள்தான் எனக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. இலங்கை அகதிகள் கதை என்பதாலும், என் அம்மா ஒரு இலங்கை அகதி என்பதாலும் இந்த படத்தில் நடித்தேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்றார்.