அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
அந்த காலத்தில் புகழ்பெற்ற காமெடி ஜோடி என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம். பின்னாளில் வாழ்க்கையிலும் ஜோடி ஆனார்கள். டி.ஏ.மதுரம் காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்துள்ளார் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அவர் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் காமெடி கேரக்டர்களில் நடித்த நிலையில் அவர் ஹீரோயினாக நடித்த படம் 'பாண்டுரங்கன் அல்லது ஜெய் ஜெய் விட்டல்'.
இந்த படத்தை டி.சி.குனே என்பவர் இயக்கி இருந்தார். எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாண்டுரங்கன் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்தார். காளி என்.ரத்னம் வில்லனாக நடித்திருந்தார். வேல் முருகன் பிக்சர்ஸ் சார்பில் எம்.டி.ராஜன் தயாரித்திருந்தார். டி.கே.சுந்தரம் பாடல்களை எழுதியிருந்தார், பாபாநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். படத்தில் 25 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. ஜக்கா என்ற கேரக்டரில் டி.ஏ.மதுரம் நடடித்தார். டி.ஏ.மதுரம் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் படம் என்றே விளம்பரம் செய்யப்பட்டது.