இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
மரகத நாணயம் பட புகழ் இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து வருகின்ற திரைப்படம் வீரன். வினய் ராய்,அதீரா ராஜ், முணிஸ் காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற ஜூன் 2 வெளியாகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் மின்னல் முரளி படத்துடன் வீரன் படத்தை ஒப்பிட்டு வரும் விமர்சனத்திற்கு பதிலளித்தார் . அதன்படி, இந்த படத்தின் கதையை கடந்த 2017 வருடத்திலே முடித்து விட்டேன். இந்த படத்தை மின்னல் முரளி படத்துடன் ஒப்பிட்டு வரும் விமர்சனத்தை அந்த படத்தின் இயக்குனரிடமும் கலந்து பேசினேன். ஆனால், மின்னல் முரளி படத்திற்கும் வீரன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முற்றிலும் இது வேற படம். இந்த படத்திற்காக 40க்கும் மேற்பட்ட சி. ஜி சாட்ஸ் பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.