பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
இந்திய திரையுலகம் கொண்டாடும் இசை மேதை இசையமைப்பாளர் இளையராஜா (வயது 82). 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை கடந்துள்ளார். அதோடு லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றி நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 13) ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரன் போன்ற இளையராஜா குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ராஜாவின் இசை மழை... முதல்வர் தேர்வு செய்த பாடல்கள்
இளையராஜாவின் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு பாராட்டு விழா துவங்கியது. ‛அமுதே தமிழே...' என்ற பாடல் முதலில் பாடப்பட்டது. இந்த பாடலை இளையராஜாவும் அவரது குழுவினரும் பாடினர். தொடர்ந்து ‛‛ராக்கம்மா கைய தட்டு..., செந்தூரப்பூவே..., அந்தி மழை பொழிகிறது..., சின்னத்தாய் அவள்..., உன்ன நினைச்சு..., ராஜா கைய வச்சா..., காதலின் தீபம் ஒன்று..., மாறுகோ மாறுகோ...'' உள்ளிட்ட பல பாடல்கள் மேடையில் நேரலையில் பாடி, இசையமைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் இளையராஜாவின் இன்னிசை மழையை ரசித்தனர். முன்னதாக இந்த மேடையில் பாடிய பாடல்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்ததாக விழாவில் கமல் தெரிவித்தார்.
சிம்பொனி இசை
இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசையும் இசைக்கப்பட்டது. இது ரசிகர்களை மேலும் இன்னிசை மழையில் நனையவிட்டது.