என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

கயல் வின்சன்ட், டி.ஜே பானு மற்றும் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும்,  இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி” படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது குறித்து படக்குழு கூறுகையில், ‛‛ஈழத்தமிழ் சினிமாவுக்கு இளையராஜா இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகினோம்.  கதையைக் கேட்டதும் எந்தவித மறுப்புமின்றி ஒத்துக்கொண்டார். அதேவேளை படத்தையும் பார்த்து உடனே பட வேலைகளை தொடங்கினார். 
யாழ்ப்பாணத்தில் உருவாகும்  ஒரு காதல் கதைக்களத்திற்கு இளையராஜா  இசையமைப்பதும், ஒரு ஈழத்திரைப்படத்திற்கு இசையமைப்பதுவும் இதுவே  முதல் தடவை. அந்தோனி படம் இளையராஜாவின் 1524வது திரைப்படமாகவும், ஈழத்தின் முதற்படமாகவும் வரலாற்றில் பதிவாகிறது. தனது 82 வயதிலும் 1500 படங்களை தாண்டி, 8000 பாடல்களுக்கும் மேலாக இசையமைத்தவரின் பொன்விழா ஆண்டில், ஈழ படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சி. விரைவில் பாடல் வெளியீட்டுவிழா நடக்க உள்ளது' என்கிறார்கள்.
 
           
             
           
             
           
             
           
            