ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பாக்கியலெட்சுமி தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சதீஷ் அண்மையில் விலகுவதாக அறிவித்தார். தற்போது அவரை தொடர்ந்து இரண்டாவது நாயகியாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டியும், ராதிகா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பல ரசிகர்களின் கேள்விகளுக்கு ரேஷ்மா பதிலளித்தார். அப்போது ஒருவர் சதீஷ் சீரியலை விட்டு விலகுவது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா 'சதீஷ் விலகியது பற்றி உறுதியாக தெரியாது. அடுத்த ஷெட்யூலில் நான் இருந்தால் உங்களுக்கு சொல்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்மூலம் சதீஷை போல் ரேஷ்மாவும் சீரியலிலிருந்து விலகிவிட்டாரா? பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.