ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் | பிளாஷ்பேக் : 'சலங்கை ஒலி' ஆன அனு பல்லவி | பிளாஷ்பேக்: சுதந்திரத்திற்கு முன்பே அதை கொண்டாடிய படம் | பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ஆண்ட்ரியாவின் பஞ்சாப் பயணம் | 'இந்தியன் 3' திட்டமிட்டபடி வெளியாகுமா? | பிளாஷ்பேக்: “கூண்டுக்கிளி” தந்த வேதனை; “குலேபகாவலி” தந்த சாதனை |
பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்று சினிமா, சீரியல், வெப் சீரிஸ் என அனைத்திலும் கலக்கி வருகிறார். இவர் நடிக்கும் பாக்கியலெட்சுமி தொடர் தமிழக மக்களிடம் இவருக்கு அதிக பெயர் புகழை தந்துள்ளது. அதுபோல, இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமாக காரணம் வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் தான்.
இந்நிலையில், அண்மையில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரேஷ்மாவின் திரையுலக வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிக பிரபலத்தை தந்த புஷ்பா கேரக்டர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'புஷ்பா கேரக்டரில் முதலில் நடிக்க மாட்டேன் என்று மறுத்தேன். ஆனால், இயக்குநர் கிளாமர் சீன் எதுவுமில்லை பண்ணிகொடுங்க என்று சொன்னார். அதனால் தான் நடித்தேன். ஆனால், இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஹீரோயின் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை' என்று கூறியுள்ளார்.