பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் |
குக் வித் கோமாளி சீசன் 4 மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் எலிமினேட்டாகிவிட்டனர். இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். முதலாவதாக நடிகரும் கலை இயக்குனருமான கிரண் என்ட்ரி கொடுத்தார். அவரை தொடர்ந்து நாகேஷின் பேரனும், ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் வந்துள்ளார்.
2014ம் ஆண்டு வெளியான கல்கண்டு படத்தில் ஹீரோவாக அறிமுகமான கஜேஷ் தொடர்ந்து படங்கள் எதுவும் நடிக்கவில்லை. தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கஜேஷுக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.