சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வெள்ளித்திரை, சின்னத்திரை என அசத்திய நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு கண்ணீர் மல்க பலர் அஞ்சலி செலுத்தினர்.

ரேபோ சங்கரின் மனைவி ப்ரியங்காவும் சின்னத்திரையில் நடிகையாக உள்ளார். அதேப்போல் மகள் இந்திரஜாவும் நடிகையாக உள்ளார். இந்திரஜாவுக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு நட்சத்திரன் என்ற மகன் உள்ளார். பேரன் நட்சத்திரனுக்கு நாளை(செப்., 20) மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் காது குத்து விழாவும், அதனைத்தொடர்ந்து ஞாயிறு அன்று முதலைக்குளத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலில் கிடா விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார். இந்தச்சூழலில் அவரின் எதிர்பாராத மரணம் அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்திச் சென்றுள்ளது.