எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
மறைந்த தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் சூப்பர் ஸ்டாரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்டி ராமராவ் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடந்தது. இந்த விழாவை என்டி ராமராவ் மூத்த மகனும் முன்னணி நடிகருமான என்டி பாலகிருஷ்ணா நடத்தினார். என்டி ராமராவ் மருமகனும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
என்.டி.ஆரின் தாக்கம் என் மீது நிறைய உள்ளது. என் முதல் சினிமா பெயர் பைரவி. பாதாள பைரவி சினிமாவில் என்.டி.ஆர். நினைவுக்கு வந்து ஹீரோ கதாபாத்திரத்திற்கு ஒத்துக்கொண்டேன்.1977ல் என்.டி.ஆருடன் டைகர் படத்தில் நடித்தேன். என்.டி.ஆர். துரியோதனன் கதாபாத்திரத்தை பார்த்து அதிசயித்து விட்டேன். அவரைப் போலவே நடித்து பார்ப்பேன். சக்தி வாய்ந்த பிரதமரான இந்திரா காந்தியை எதிர்த்தவர் என்.டி. ராமராவ். அவர் ஒரு யுக புருஷன்.
என்.டி.ராமராவினால் நான் இன்ஸ்பிரேஷன் பெற்றேன். அவரது பக்தி படங்கள் பலவற்றைப் பார்த்தேன். குருச்சேத்திரா நாடகத்தில் துரியோதனாக என்.டி.ஆர் மாதிரியே காப்பி அடித்து நடித்தேன். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். நண்பர்கள் நீயும் சினிமா நடிகன் ஆகிவிடு. தெலுங்கில் ராஜினாலா, முக்காமலா மாதிரி பெரிய வில்லனாக வருவாய் என்று கூறினார்கள். அதுதான் நடிகனாக வேண்டும் என்னும் ஆர்வத்தை எனக்குள் உருவாக்கியது.
சினிமாவுக்கு வந்த புதிதில் நான் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன். ஏனென்றால் பத்து பதினைந்து நாட்களில் படத்தில் நடித்து முடித்து விடலாம். பணமும் கிடைத்துவிடும். ஹீரோ என்றால் அதிகமாக பொறுப்பு வரும் என்பதால் எனக்கு அதில் இஷ்டமில்லை. பைரவி பட இயக்குனர் எனக்கு ஹீரோ வேடம் கொடுப்பதாக கதை சொன்னபோது எனக்கு விருப்பமில்லை. ஆனால் படத்தின் பெயர் பைரவி என்று சொன்னவுடனே ஏற்றுக்கொண்டேன்.
பாலகிருஷ்ணா கண்பார்வையாலேயே எதிரியை கொன்று விடுவார். அவர் தூக்கி எறிந்தால் ஜீப் கூட 30 அடி தூரத்தில் எகிறி விழும். சல்மான் கான், ஷாருக்கான், ரஜினிகாந்த் அதுபோன்ற சண்டைக் காட்சிகளை செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை பாலகிருஷ்ணா செய்தால்தான் ஒத்துக்கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் பாலகிருஷ்ணாவை பாலகிருஷ்ணாவாக பார்க்கவில்லை. அவருக்குள் என்.டி.ஆர்ஐ பார்க்கிறார்கள். அதனால் தான் அது போன்ற காட்சிகளை அவர் செய்தால் மட்டும் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
சிவாஜி, ராஜ்குமார், என்டி ராமராவ் போன்ற பெரும் நடிகர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.