தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
தமிழ் சினிமாவை பொருத்தவரை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தான் தனது படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் அதிகப்படியான கலைஞர்களை நடிக்க வைப்பார். இந்த நிலையில் தற்போது ராம் சரணை வைத்து தான் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தின் சண்டைக் காட்சியிலும் ஆயிரம் ஸ்டன்ட் கலைஞர்களை நடிக்க வைத்து வருகிறார் ஷங்கர். இந்த நிலையில் தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் ஒரு பாடல் கட்சியில் 2000 நடன கலைஞர்களை நடிக்க வைக்கிறார்கள்.
இதற்காக தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலிருந்தும் நடன கலைஞர்களை ஒரு மாதத்திற்கு ஒப்பந்தம் செய்கிறார் லோகேஷ் கனகராஜ். காரணம் இந்த லியோ படத்தின் பாடல் காட்சியை அவர் 30 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளார். இந்த ஒரு காட்சியை படமாக்கவே பல கோடிகளை செலவு செய்கிறார்களாம். அந்த வகையில் இதுவரை ஷங்கர் இயக்கும் படங்களின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் தான் அதிகப்படியான கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் 2000 நடன கலைஞர்களை நடிக்க வைத்து ஷங்கரின் சாதனையை முறியடிக்க போகிறார்.